இந்தி பிக்பாஸ்-ல் கதறி அழுத ஸ்ருதிகா... ஸ்ருதிகாவின் கண்ணீருக்கு காரணம் என்ன?

இந்தி பிக்பாஸ்-ல் கதறி அழுத ஸ்ருதிகா... ஸ்ருதிகாவின் கண்ணீருக்கு காரணம் என்ன?
x

நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா , ஸ்ரீ, நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் வெள்ளித்திரை பெரிதாக அவருக்கு கைக்கொடுக்கவில்லை....

சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ருதிகா, சோஷியல் மீடியா சென்சேஷனலாகவும் வலம் வந்தார்....

வெகுளித்தனமான பேச்சு, சுட்டித்தனமான முகபாவனைகள் என ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதிகா..

இதன் பின் படு வைரலான அவர், தமிழ் பிக்பாஸ்-ல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக இந்தி பிக்பாஸ்-ல் என்ட்ரி கொடுத்தார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸ்-ஐ தமிழில் பேச வைத்து கவனம் பெற்றார் ஸ்ருதிகா...

தொடக்கத்தில் ஸ்ருதிகாவை இந்தி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்களை ஈர்த்தது போல வெளிப்படையான பேச்சால் கடைசியில் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார் ஸ்ருதிகா....

இதனால் இந்தி மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆதரவும் ஸ்ருதிகா பக்கமே சென்றது..

இப்படி இந்தி பிக்பாஸ்-ல் அதிகம் பேசப்படும் போட்டியாளராக இருக்கும் ஸ்ருதிகா, கலகலப்பாக இருப்பதையே பார்த்து வந்த சூழலில், திடீரென அவர் கதறி அழும் வீடியோ வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

ஸ்ருதிகா ஏன் அழுகிறார் ? என்ன நடந்தது? என சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழ, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் தோழியுடன் ஏற்பட்ட விரிசலே காரணம் எனத் தெரியவந்துள்ளது..

பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை சும் தாரங்-உடன் நெருங்கி பழகி வந்த ஸ்ருதிகா, டாஸ்க் ஒன்றில் அவருக்காக தன்னையே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து கொள்ளும் வகையில் விட்டு கொடுத்துள்ளார்.

ஆனால், இதற்கு பிறகு தோழி சும்-க்கும் ஸ்ருதிகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டுள்ளது..

இதனால் மனமுடைந்த ஸ்ருதிகா, கதறி அழுதுள்ள காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

அத்துடன், தான் வீட்டிற்கு செல்கிறேன் என அவர் ஒரு புறம் அழ, அவரின் தோழியான சும் தரங்கும் மற்றொரு பக்கம் அழுகிறார்...ஸ்ருதிகாவின் கண்ணீருக்கு காரணம் என்ன?

இப்படி இந்தி பிக்பாஸ் களேபரக்காடாக மாற, வார இறுதியிலேயே இதற்கான தீர்வு தெரியும் என கூறுகின்றனர் ரசிகர்கள்...


Next Story

மேலும் செய்திகள்