நாட்டை காக்க வேண்டும் என்ற வெறியோடு வந்த இளைஞர்களை கதற கதற துடிதுடிக்க விட்ட கொடூரன் - அதிர்ச்சி வீடியோ

x

ஆந்திராவில், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களை பெல்ட்டால் தாக்கிய பயிற்சி மைய உரிமையாளரை கைது செய்து விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளத்தில் பசவ ரமணா என்பவர் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் மையத்தை நடத்தி வருகிறார்.இந்தியன் ஆர்மி காலிங் என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வரும் ரமணா, பயிற்சிக்காக வருபவர்களிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவரை ரமணா, மனிதாபிமானமே இல்லாமல் கதற, கதற பெல்டால் அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2023 டிசம்பரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான அந்த வீடியோவை பார்த்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே ரமணா விரைவில் கைதாவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருததப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்