U-டர்ன் அடித்து எதிரே சீறி வந்த எமன் - அடுத்த நொடி உயிர் போகுமென தெரியாமல் பார்த்த மக்கள்

x

U-டர்ன் அடித்து எதிரே சீறி வந்த எமன்

அடுத்த நொடி உயிர் போகுமென தெரியாமல் சந்தோசமாய் பார்த்த மக்கள் - நடுக்கடலில் நடுங்கவைக்கும் திக்திக்

நடுக்கடலில் சுற்றுலாப் பயணிகள் தத்தளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

கடலின் அலைகளைக் கிழித்துக் கொண்டு சாகசம் செய்து கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான ஸ்பீடு போட்டினை ஆரவாரம் செய்து ரசித்துக் கொண்டிருந்தனர் சுற்றுலாப் பயணிகள்.

கடலில் மிகப் பெரிய யூ டர்னை போட்ட அந்த ஸ்பீடு போட் எடுத்த வேகமும் அது வந்த திசையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதோ விபரீதம் ஏற்படப் போகிறது என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடத்திற்குள் நடந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காதது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு விரும்பி செல்கின்றனர். இதில் முக்கியமான சுற்றுலாத்தளமாக கேட் வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து கடலுக்குள் அமைந்திருக்கும் எலிபெண்டா தீவாகும். இந்த தீவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக் கோயில்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன.

கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடலில் அமைந்திருக்கும் இந்த தீவைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஏராளமான படகு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. அப்படி நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் எலிபெண்டா தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு நீல்கமல் என்ற பெரிய படகு மூலம் சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் கரைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது நடுக்கடலில் இந்தியக் கடற்படை வீரர்கள் ஸ்பீடு போட் ஒன்றில் மிக வேகமாகச் சென்று சாகசத்தில் ஈடுபடுவது போலச் சென்று கொண்டு இருந்தனர்.

திடீரென அந்த ஸ்பீடு போட் மிக வேகமாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் நீல்கமல் படகு மீது மோதியது.இதில் நீல்கமல் படகு நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் பலர் கடலில் தத்தளித்ததால் நிலைமை மோசமானது..

இதனைத் தொடர்ந்து கடற்படை அதிகாரிகள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நடுக்கடலுக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 99 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் மேலும் சிலர் மாயமானதாக கூறப்படும் நிலையில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியக் கடற்படை, புதிய என்ஜின் பொருத்தப்பட்ட படகைச் சோதனை செய்து போது படகு கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்து இருக்கிறது.

நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்ற பயணிகளுக்கு நடுக்கடலில்

நேர்ந்த சம்பவம் அவர்களது உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்