"ஏன்டா ஸ்கூல் டாய்லெட்டுல பாக்குற வேலையாடா அது"..வாத்தியாரை செருப்பாலே கதற கதற அடித்த பெண்கள்
தெலங்கானாவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர்கள் காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மஞ்சிரியாலா நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ள சத்ய நாராயணா, மாணவிகளின் கழிவறைக்கு சென்று 6ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆவேசத்துடன் பள்ளிக்குச் சென்றனர்... அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சத்ய நாராயணா பீதியில் பள்ளியில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றார்... ஆனால் அவரை விரட்டிப் பிடித்த பெற்றோர்கள் காலணிகளைக் கொண்டு சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்... இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...
Next Story