நீங்க சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போறீங்களா..? இதோ இந்த நியூஸ் உங்களுக்கு தான்
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று முதல் மண்டலகால பூஜைகள் தொடங்கியது. பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் சுமுகமாக சாமி தரிசனம் செய்வதாகவும், வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டு நடை அடைக்கும் வரை விஐபிக்கள் உள்பட மொத்தம் 30 ஆயிரத்து 687 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்... பார்க்கிங் வசதி, உணவு, பிரசாதங்கள், குடிநீர், மருத்துவ சிகிச்சை என அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார்..
Next Story