சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வந்த முக்கிய தகவல்
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெறுகிறது.இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை,வரும் 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு'அடிப்படையில் 70 ஆயிரம் பேர்,ஸ்பாட் புக்கிங்'அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில், பக்தர்கள்,இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.
Next Story