சபரிமலை கோயிலில் அள்ள அள்ள 227 கிலோ தங்கம்.. முதலீடாக மாறுகிறது
சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தினால் ஆன பொருட்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதலீடாக மாற்றுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதை ஏற்ற நீதிபதிகள், 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கொண்டு வந்துள்ள தங்க முதலீடு திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் என்றும், இதிலிருந்து கிடைக்கும் வட்டியை தனிக்கணக்கில் சேமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஏற்கனவே கொச்சி, குருவாயூர் தேவசம்போர்டு, இந்த திட்டத்தில் 869 கிலோ தங்கத்தை முதலீடு செய்து, 2019 முதல், இதற்காக, 13 கோடியே 56 லட்சம் ரூபாயை வட்டி வருவாயாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story