சபரிமலை சீசனையொட்டி இடுக்கி உணவகங்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான விலை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது...

x

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை மகரவிளக்கு தரிசனம் துவங்க உள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பக்தர்களுக்கு வழங்க வேண்டிய உணவுகளுக்கான கட்டணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டீ, காபி, வடைபோன்றவை 11 ரூபாய், போண்டா, வாழைப்பழம் பஜ்ஜி 10 ரூபாய், இட்லி 12 ரூபாய், சப்பாத்தி 11 ரூபாய், பூரி 12 ரூபாய், மசாலா தோசை 50 ரூபாய், சாப்பாடு 71 ரூபாய், வெஜிடபிள் பிரியாணி 71 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது... அதேபோல் கஞ்சி 35 ரூபாய், மரவள்ளிக் கிழங்கு 32 ரூபாய், தயிர் சாதம் 48 ரூபாய், எலுமிச்சை சாதம் 47 ரூபாய், பாயாசம் 13 ரூபாய், ஆனியன் ஊத்தப்பம் 56 ரூபாய், ஆரஞ்சு ஜூஸ் 48 ரூபாய், லெமன் சோடா 24 ரூபாய் என ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளதோடு, விலைப்பட்டியலை ஹோட்டல்களில் விளம்பரப் பலகையில் குறிப்பிட்டு பக்தர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்