இத்தனை லட்சம் பேரா..! மகரஜோதி தரிசனம்... சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..
சபரிமலை ஐயப்பன் கோயிலில், 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, ஜனவரி 13ம் தேதி வரை ஆன்-லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14ம் தேதி 40 ஆயிரமாகவும், 15ம் தேதி உடனடி முன்பதிவு எண்ணிக்கை, 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிப்ரவரி 9ம் தேதி முதல் உடனடி முன்பதிவு கவுன்ட்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மகரவிளக்கு பூஜைக்கு மறுநாளான 15ம் தேதி நெரிசலை தவிர்க்க, அன்று மாலை 3 மணியில் இருந்து, 5 மணிக்குள் தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், மாலை 6 மணிக்கு பிறகு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story