``ரூ. 5 லட்சம்..'' - சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு... வெளியான அதிமுக்கிய செய்தி

x

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், நிலக்கல்லில் கடந்த வருடம் 7 ஆயிரத்து 500 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடிந்த நிலையில் இந்த வருடம் கூடுதலாக 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.. மேலும் சபரிமலை கோயில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் தவிர ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி மரணமடையும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என விளக்கம் அளித்துள்ளார்.. அத்துடன் சபரிமலையில் மரணிக்கும் பக்தர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கான முழு செலவையும் தேவசம் போர்டே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைவரும் தரிசனத்திற்கு வருவதில்லை என்பதால்

உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், சபரிமலைக்கு எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்... இம்முறை 24 மணி நேரமும் சபரிமலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ள நிலையில் 15ம் தேதி நடை திறக்கும்போது 40 லட்சம் டின் அரவணை தயாராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்