ஐயப்ப சாமிகள் புனிதமாக மதிக்கும் சபரிமலை 18ம் படிகளில் 23 போலீசார் செய்த காரியம்.. கிடைத்த தண்டனை

x

ஐயப்ப சாமிகள் புனிதமாக மதிக்கும் சபரிமலை 18ம் படிகளில் 23 போலீசார் செய்த பகீர் காரியம்.. கடைசியில் கிடைத்த

கடவுள் தண்டனை

கார்த்திகை சீசன் களைகட்டியிருக்கும் சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ தற்போது கேரளா மற்றும் உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கடந்த 15 ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்குத் தரிசனத்திற்கான பாஸ் வழங்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் இருமுடிகளைச் சுமந்து ஐயப்பனைத் தரிசித்து வருகின்றனர். கோயில் திறக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து இருப்பதாகவும்,இவர்கள் மூலமாக சுமார் 55 கோடி ரூபாய் வருமானம் வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அளவுக்கதிகமான பக்தர்களின் கூட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எடுத்த ஒரு போட்டோ தான் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் கோயில் நடை சாத்தப்பட்ட நேரத்தில் பக்தர்கள் புனிதமாக மதிக்கக்கூடிய 18 படிகளில் அங்கு பணிபுரிந்த 23 போலீசார் கூட்டாக நின்று போட்டோ எடுத்துள்ளனர்.

பதினெட்டு படிகளில் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டை அணியக்கூடாது என்பதும் பதினெட்டு படிகளில் நிற்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்பது இங்கு பின்பற்றப்படும் நடைமுறை. மேலும் பின்புறத்தைக் காண்பிப்பது என்பது கோவிலின் விதிகளுக்கு எதிரானது என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இது தொடர்பாகப் பாதுகாப்புப் பணியினை மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரிகளிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. மேலும் போட்டோவில் உள்ள 23 போலீசாரும் உடனடியாக திருவனந்தபுரத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு கண்ணூர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 23 காவலர்களும் வீட்டிற்கே செல்லாத வகையில் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படும் என கேரள மாநில காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்