சபரிமலையில் வெட்டப்படும் 3.4 லட்சம் மரங்கள்... மெகா அறிவிப்பு
சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , அதற்காக மூன்று லட்சத்து 40 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. அவற்றில் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரப்பர் மரங்கள், 2 ஆயிரத்து 492 தேக்கு மரங்கள், இரண்டாயிரத்து 247 காட்டுப்பலா மரங்கள் மற்றும் ஆயிரத்து 131 பலா மரங்கள் மற்றும் 828 மகோகனி மரங்கள் மற்றும் 184 மா மரங்கள் உள்ளடங்கும். அது மட்டுமின்றி சில கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் பாதிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த தகவல்கள் கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story