சபரிமலை வரும் பக்தர்களுக்கு.. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு

x

சபரிமலையில் தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தரிசனம் செய்ய பல்வேறு புதிய நடைமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்கள், அந்த நாட்களில் சரியாக வர வேண்டும். ஒருவேளை யாத்திரை தேதியை மாற்ற முடிவு செய்தால், பக்தர்கள் தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்.

திட்டமிட்ட தரிசனத்தை தவறவிடுபவர்களின் இடங்கள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு மாற்றப்படும்.

பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார்-சத்திரம் உள்ளிட்ட நுழைவு வாயில் களில் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தும் பக்தர்கள், 12 மணி நேரத்திற்குள் தரிசனத்தை முடிக்க வேண்டும்.

இனி அனைத்து மெய் நிகர் வரிசை முன்பதிவுகளும், ஆதார் அட்டையின் அடிப் படையில் மட்டும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்