#JUSTIN || இருமுடி கட்டு இல்லாத ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

x

இருமுடி கட்டு இல்லாத ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

சபரிமலையில் மாதபூஜை நாட்களில் இரு முடிகட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் மாத பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கோவில் நடை இன்று இரவு அடைக்கப்படுகிறது. முன்னதாக இன்று தந்திரி பிரம்ம தத்தன் தலைமையில் சகஸ்ர கலச பூஜை நடைபெறும்.இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை நாட்களில் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக, இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்