தொடங்கியது சபரிமலை சீசன்..."48 நாட்கள் விரதத்துக்கு பின் இது நடக்கும்" - பக்தர்கள் சொன்ன விஷயம்

x

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் துவங்கியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இன்று கார்த்திகை முதல் நாள் என்பதால் ஏரானமான பக்தர்கள் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து கொண்டனர். நேற்யை தினம் சபரிமலை கோயிலில் மண்டல பூஜைக்கான நடை திறக்கப்பட்டுள்ளதாலும் நேற்று பௌர்ணமி என்பதாலும் ஏராளனமான பக்தர்கள் நேற்றைய தினமும் மாலை அணிந்து கொண்டனர். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்பபடுகிறது. ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்