திடீரென விடாமல் துரத்திய காண்டாமிருகம்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்... வெளியான பகீர் காட்சிகள்
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், சுற்றுலாப் பயணிகளை நீண்ட தூரம் துரத்தி சென்றதால் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பின்தொடர்ந்து துரத்தி வந்தது. அவர்கள் வாகனத்தை வேகமாக இயக்கியபோதும், காண்டாமிருகம் விரட்டி வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுபோன்று பல வாகனங்களை காண்டாமிருகம் விரட்டிச் சென்றதாக சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
Next Story