ரீல்ஸ் மோகத்தால் நடந்த சம்பவம் - வீடியோவால் வந்த உண்மை

x

யூட்யூபில் பிரபலமாக வேண்டும், இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் வேண்டும், அதற்கு எதுவும் செய்யலாம் என இறங்கும் பலரும் ஆப்புகளை தேடிச் சென்று சிக்குவது வாடிக்கை தான்...

அதிலும் Prank என்ற பெயரில் பொது இடங்களில் சிலர் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது...


பொது இடங்களில் இருப்பவர்களை வம்பிழுப்பது போல எல்லை மீறும் இவர்கள் இதை எல்லாம் Prank என சொல்லிக் கொண்டு செய்வது தான் சோகம்..

அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்திருக்கிறது.

சிப்ரி பஜாரின் சாலையில் சைக்கிளில் முதியவர் ஒருவர் சென்று கொண்டிருக்க, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முதியவரின் முகத்தில் ஸ்பிரேவை அடிக்கிறார்....

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அடிப்பார்களே.. அந்த நுரையுடன் கூடிய ஸ்பிரேவை முதியவர் முகத்தில் அடித்து விட்டு அதை பிராங்க் என சொல்லி தன் இணைய பக்கத்திலும் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ள...

விடுமா போலீஸ்...?

எந்த வேகத்தில் வீடியோ இணையத்தில் பரவியதோ, அதே வேகத்தில் ஸ்பிரே அடித்தவரையும் தேடிப்பிடித்தது...

விசாரணையில் அந்த நபர் சிப்ரி பஜார் கிராமத்தை சேர்ந்த வினய் யாதவ் என தெரியவந்தது... உ.பி.யில் இவர் பிரபலமான யூட்யூபராம்..

ஒருவேளை ஸ்பிரே அடித்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து அந்த முதியவருக்கு ஏதேனும் நடந்திருந்தால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ன?

தன் பாலோயர்களை கவரவே இதுபோன்ற சேட்டைகளில் வினய் யாதவ் ஈடுபடுவதும் வழக்கமாம்.. இதை எல்லாம் தெரிந்து கொண்ட உ.பி.போலீசார் அவரை அலேக்காக தூக்கிச் சென்று தங்கள் பாணியில் கவனித்து அனுப்பி வைத்துள்ளனர்...

நம்முடைய சுதந்திரம் என்பது அடுத்தவரை பாதிக்காத வரையில் தான் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறது..


Next Story

மேலும் செய்திகள்