ரஜினி முதல் ஷாருக்கான் வரை.. பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில், எதிர்காலத் திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சிரஞ்சீவி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
Next Story