கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ராகுல் - பிரியங்கா கொடுத்த பர்த்டே கிப்ட்

x

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்

பிறந்தநாள் வாழ்த்து கூறி, உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்திக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் கையைப் பிடித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேக் வெட்ட, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ராகுல் காந்தி கேக் ஊட்டி விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்