திக் திக் சாகசம்... அணையின் மேல் சீறி பறந்த ராகுல்... சிலிர்ப்பூட்டும் வீடியோ
கேரள மாநிலம் வயநாடை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்த நிலையில் கராப்புழா அணை பகுதியில் அமைந்துள்ள கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் பயணம் செய்தார்... பிரியங்கா காந்தியும் உடன் வந்திருந்தார்... தென்னிந்தியாவின் மிகப்பெரிய ராட்சத ஊஞ்சல் என்று வர்ணித்த ராகுல், வயநாடு எப்போதும் போல் பிரமிக்க வைக்கிறது என்றும், ஜிப்லைனில் சென்ற ஒவ்வொரு நொடியும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.. ராகுல் காந்தியின் ஜிப் லைன் பயண வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
Next Story