"இன்னும் FIR பதியப்படவில்லை" - கனிமொழி | Rahul Gandhi
ராகுல் காந்தியை கீழே தள்ளியது தொடர்பான காங்கிரஸின் புகாரின் மீது நடவடிக்கை இல்லையனெ எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின்மீது பாஜக எஃப்.ஐ.ஆர் போடுவதாக அறிவித்திருப்பது குறித்த பத்திரிக்கையாளரின் கேள்விக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார். பாஜகவினர், ராகுல் காந்தியை உள்ளே செல்ல விடாமல் தடுத்து, அவரை கீழே தள்ளியதாக கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் புகார் அளித்த நிலையில் இன்னும் எஃப்.ஐ.ஆர் பதியப்படவில்லை என்றும், அவைத் தலைவரிடம் புகார் தந்த பின்னரும் நடவடிக்கை இல்லையென்றும் கனிமொழி பதில் அளித்தார்.
Next Story