ரெக்கமண்ட் செய்த ராகுல் - தூக்கி கடாசிய மோடி?
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியனும் அதன் உறுப்பினர்களும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் தேர்வு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் என்ற முறையில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் மற்றும் மேத்யூ ஜோசப் ஆகியோரும், உறுப்பினர்களுக்கு முன்னாள் நீதிபதிகள் முரளிதர் மற்றும் அகீல் அப்துல் ஹமீது ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர். இந்நிலையில் மனித உரிமை ஆணைய பதவி நியமனங்கள் குறித்து, காங்கிரஸ் அறிக்கையின் வாயிலாக அதிருப்தி தெரிவித்துள்ளது. அதில் தாங்கள் முன்வைத்த பரிந்துரைகளை தேர்வு குழு ஏற்கவில்லை என்றும், தேர்வு நடைமுறையில் பாரபட்ச தன்மை காட்டப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.