"ரூ.40 ரூபாயில் இருந்து இப்போ ரூ.400 ரூபாய்" - ராகுல் காந்தி போட்ட வீடியோ ட்வீட்

x

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்து வரும் வேளையில், அரசு கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். டெல்லி கால்காஜியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்று காய்கறி விலை குறித்து பெண்களுடன் கலந்துரையாடும் வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பூண்டு தற்போது 400 ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். விலைவாசி உயர்வு சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை எகிற வைத்திருப்பதாகவும், ஆனால் அரசு கும்பக்கர்ணனை போல தூங்கிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்