செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி செய்த தரமான சம்பவம்
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மும்பையில் லாக்கருடன் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த லாக்கரை திறந்த ராகுல் காந்தி, உள்ளே இருந்து, பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் ஒன்றாக இருப்பது போன்ற போஸ்டரை எடுத்துக் காட்டினார். இதனைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தாராவி மறு மேம்பாட்டு திட்டம் குறித்த வரைபடத்தையும் செய்தியாளர்களிடம் எடுத்துக் காட்டினார். ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தாராவி பகுதியின் நிலத்தை அதானிக்கு தாரை வார்க்க பிரதமர் மோடி திட்டமிட்டு வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது லாக்கரை கொண்டு வந்து கேலி செய்துள்ளார்.
Next Story