"ராகுல் காந்தி சஸ்பெண்ட்...?" - அடுத்த பரபரப்பில் நாடாளுமன்றம்

x

மாநிலங்களவையில் அமித்ஷா பேசிய பேச்சுக்களை ராகுல் காந்தி திரித்துக்கூறியதாக குற்றம் சாட்டி, அவர் மீது உரிமை மீறல் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே, மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் நமது நாட்டின் கண்ணியத்தை ராகுல் காந்தி தரம் தாழ்த்தி விட்டதாக அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்க வேண்டிய பொறுப்பான அனைத்து வரம்புகளையும் ராகுல் காந்தி மீறிவிட்டதாகவும், நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதோடு, அவையை அவமதித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி மீதான உரிமை மீறல் பிரச்சனை விசாரித்து முடிக்கப்படும் வரை, அவர் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும், பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் தூபே வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்