புஷ்பா 2 பாத்ததும் அரசு பஸ் திருட்டு-புஷ்பராஜூக்கு எகிறும் கிரைம் ரேட்... அல்லோகலப்படும் அக்கட தேசம்
புஷ்பா 2 திரைப்படத்தின் இரவு காட்சியை பார்த்த இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை கடத்தி சென்று பேருந்திலேயே உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
நேரம் ஆக..ஆக.. எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் தூங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்த இவர் ஒருவழியாக, அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், சித்தலூர் பகுதிக்கு சென்றதும் பேருந்தை நிறுத்தி விட்டு அமைதியாக பேருந்திலேயே படுத்து நன்கு குறட்டை விட்டு உறங்கி உள்ளார், இந்த சாதிக்.
அப்போது நரசிப்பட்டினத்தில் பேருந்தை காணாமல், அதிர்ச்சியடைந்த போக்குவரத்து அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதைக் கேட்டு திடுக்கிட்ட போலீசார், பேருந்தை யார் ஓட்டிச் சென்றது என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டதோடு, பேருந்தை பல பகுதிகளிலும் வலைவீசித் தேடி வந்திருக்கின்றனர்
இதன் பின்னர், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், சித்தலூர் பகுதியில் பேருந்து இருப்பதாக தகவல் அறிந்த போலீசார், பேருந்தை எடுத்துச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதிக் என்ற அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே தெலங்கானா அமைச்சர் சீதாக்கா புஷ்பா படத்திற்கு தேசிய விருது அளித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. காவல்துறையை தவறாக சித்தரிக்கும் புஷ்பா 2 படத்துக்கு பதிலாக, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களைப் பாருங்கள் என்பவற்றை பேசியதாக தெலங்கானாவில் டிசிபி அக்ஷன்ஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
இதனிடையே, புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிழந்த விவகாரம் தொடர்பாக, காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பிய இருந்த நிலையில், அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தின் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் விசாரணைக்காக ஆஜராகினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த விசாரணையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக, புஷ்பா 2 படம் ரிலீஸ்க்கு மறுநாள் பெண் இறந்த செய்தி கேட்டீர்களா? ஏசிபி, டிசிபி உங்களை ஆடிட்டோரியத்தில் சந்தித்தார்களா? என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஆம்.. மறுநாள் கேள்விப்பட்டதாகவும், தன்னை யாரும் சந்திக்கவில்லை.. ஊடகங்கள் தன்னை பற்றி பொய்யான செய்திகளை பரப்பியது எனவும் ரொம்பவே கேசுவலாக பதிலளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.