3,000 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு - ஆச்சரியத்தில் உச்சநீதிமன்றம்
பஞ்சாபில் 3000 ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது விந்தையாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான தேர்தல் மனுக்களை, தேர்தல் தீர்ப்பாயம் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.
Next Story