புதுவையில் அமலுக்கு வந்த உயர்த்தப்பட்ட மின் கட்டணம் | Puducherry
புதுச்சேரியில் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு எந்த மாற்றமும் இல்லாமல் அமலுக்கு வந்துள்ளது.
பொது அறிவிப்பினை புதுச்சேரி மின் துறை வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 2 ரூபாய் 70 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் 5.40 ரூபாய் மின்கட்டணத்திற்கு பதிலாக ரூ.6 வசூலிக்க உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 65 பைசா முதல் 85 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.