காதலன் கண்முன்னே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பல் - பல்கலை. வளாகத்தில் பேரதிர்ச்சி

x

காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்

வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி முதலாமாண்டு படிப்பு படித்து வருகிறார்... இதே கல்லூரியில் படிக்கும் தன் காதலருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டி மாணவரைத் தாக்கி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவி தப்ப முயன்ற போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவி சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ள நிலையில், அந்த கும்பலில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்