ஆன்லைன் மூலம் வாரி சுருட்டிய ரூ.1கோடி..மொத்த தமிழகத்தையும் கிறுகிறுக்க வைத்த நபர்

x

புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அப்துல் ஷாகித் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், கஸ்டம்ஸில் பிடிபடும் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வாட்ஸ்அப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்து 20 க்கும் மேற்பட்டோர்களை ஏமாற்றி 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்