மதுபாட்டிலால் தாக்கி துடிதுடிக்க வாலிபர் கொலை... அதிர்ச்சி வீடியோ
புதுச்சேரியில் வாலிபர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியை சேர்ந்த முத்து என்பவர், குருவிநத்தம் பகுதியிலுள்ள மதுபானக்கடைக்கு சென்றபோது, அங்கிருந்தவர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேர், முத்துவை மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். முத்துவின் கொலையை கண்டித்து அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story