இறந்து போன தாயின் மொபைலில் இருந்து வந்த மெசேஜ்.. கதறி துடித்த மகன் - இதுவரை பாரா கொடூரம்
புதுச்சேரி வடுவாகுப்பத்தை சேர்ந்த இளவரசி வீட்டு வேலை செய்து வந்தார். கணவனைப் பிரிந்த இளவரசி மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஒட்டுநரான கிருஷ்ணப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நாளடைவில் அது தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. மகன் மற்றும் மகள் இல்லாத நேரங்களில் இளவரசியின் வீட்டிற்கு கிருஷ்ணப்பன் வந்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்த நிலையில் வார விடுமுறைக்காகக் கடந்த வெள்ளிக்கிழமை மகன் மற்றும் மகள் தங்களது பாட்டி ஆதிலட்சுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டிற்கு வந்த போது இளவரசியைக் காணாததால் பல இடங்களில் தேடியுள்ளனர். இளவரசியின் மகன் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு இருக்கிறார். போனை யாரும் எடுக்காத நிலையில் சிறிது நேரத்தில் தாயின் எண்ணிலிருந்து ஆங்கிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லுங்கள் என குறுஞ்செய்தி வந்து இருக்கிறது