PRTC பேருந்து கட்டணம் உயர்வு! குறைந்தபட்சம்... அதிகபட்சம் எவ்வளவு?

x

ஏ.சி வசதி இல்லாத டவுன் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 13ல் இருந்து 17 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்சம் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி டவுன் பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10ல் இருந்து 13 ரூபாயாகவும், அதிகப்பட்ச கட்டணம் 26ல் இருந்து 34 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அதிகப்பட்சம் 8 ரூபாய் அதிகரித்துள்ளது... அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 36ல் இருந்த 47 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி அல்லாத எக்ஸ்பிரஸ் பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் கிலோமீட்டருக்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கிலோமீட்டர் வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி எக்ஸ்பிரஸ் பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் கிலோமீட்டருக்கு 1 ரூபாய் 30 பைசா என்பது தற்போது 1 ரூபாய் 69 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 25 கிலோமீட்டர் வரை 50 ரூபாய் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி வால்வோ பேருந்து கிலோமீட்டருக்கு 1 ரூபாய் 70 பைசா என்பது தற்போது 2 ரூபாய் 21 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கிலோமீட்டருக்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், இதன் மூலம் புதுச்சேரி - கடலுார் பேருந்து கட்டணமும் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்