சாகும் வரை உண்ணாவிரதம்... பிரசாந்த் கிஷோர் திடீர் அறிவிப்பு

x

பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல்நிலை தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிசம்பர் 13ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்யக்கோரி போராடிய தேர்வர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த பீகார் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், 48 மணி நேரத்தில் பீகார் அரசு தேர்வுகளை ரத்து செய்ய கெடு விதித்தார். பீகார் அரசு செவி சாய்க்காத நிலையில், மறுதேர்வு நடத்தும் வரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்