மகர சங்கராந்தி, பொங்கல் கொண்டாட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு | Modi
டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளமான அறுவடைக் காலம் அமைய வாழ்த்துவதாக, அவர் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் துளசி மாடத்திற்கு திலகம் இட்டு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்ட பிரதமர், கோமாதாவுக்கு வஸ்திர தானம் அளித்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து குத்து விளக்கேற்றி பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி விழாவை தொடங்கி வைத்த பிரதமர், அங்கு நடைபெற்ற கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தார்
Next Story