மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா...சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மோடி

x

மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.முருகன் இல்லத்தில், வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள், டெல்லிவாழ் தமிழர்களும் கலந்து கொள்கிறார்கள். ஏற்கனவே எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய நிலையில், பொங்கல் விழாவிலும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்