ஃபெஞ்சல் புயலால் ஆட்டம் கண்ட புதுச்சேரி.. மத்திய குழு அதிரடி ஆய்வு..!
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாகூர் துணை மின் நிலையத்திற்க்கு வந்த அவர்களை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வரவேற்றார். பாகூர் துணை மின் நிலயத்தில் ஆய்வை துவக்கி உள்ள மத்திய குழுவினர் தொடர்ந்து கிராமப்புறமான பாகூர் தொகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Next Story