கொந்தளிக்கும் கடற்கரை..! உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு முதலமைச்சர் ரங்கசாமி | Pondicherry
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என வானியலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரி கடல், வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் போலீசார் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை இறங்க வேண்டாமென எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி, கடல் சீற்றத்தை பார்வையிட்டார், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்காதவாறு, கூடுதல் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், தேவைப்பட்டால் கடற்கரை சாலையை முழுவதுமாக மூடவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story