``7 வயது சிறுமியை... திருமணம் செய்ய ஒப்பந்தம்..'' உறவினரின் துரோகம்... மகளை விற்ற அப்பா

x

குஜராத் மாநிலம் சபர் கந்தா மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தனது மனைவி மற்றும் ஏழு வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். கூலித் தொழிலாளியுடன் அவரது உறவினர் தீலிப் என்பவரும் தங்கி வந்து இருக்கிறார்.

தீலிப் வேலை செய்த நிறுவனத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை கடன் வாங்கி இருக்கிறார். அதற்குக் கூலித் தொழிலாளியும் உத்தரவாதம் அளித்து இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக தீலிப் மாயமானதால் கடன் கொடுத்தவர்கள் கூலித் தொழிலாளிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் அர்ஜுன் என்பவர் கூலித் தொழிலாளியிடம் அவரது பெண் குழந்தையை விற்றால் இந்த கடன் தொல்லைகளில் இருந்து தப்பித்து விடலாம் என ஆலோசனை கூறி இருக்கிறார். இதற்குக் கூலித் தொழிலாளி சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அர்ஜுனுக்குத் தெரிந்த ராஜஸ்தானைச் சேர்ந்த உமீது சிங் என்பவருக்கு ஏழு வயது சிறுமியை நான்கு லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

பெண் குழந்தையை விற்ற பணம் மூலமாகத் தனது உறவினர் கடனை அடைத்து இருக்கிறார். இது தொடர்பாகத் தகவல் அறிந்த போலீசார் அர்ஜூன் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். ஏழு வயது சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியை விலைக்கு வாங்கிய உமீது சிங் ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முன்னதாக ஏழு வயது சிறுமி வளர்ந்ததும் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி கூலித் தொழிலாளியுடன் உமீது சிங் ஒப்பந்தம் போட்டது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஏழு வயது சிறுமியை போலீசார் உமீது சிங் வீட்டிலிருந்து பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்