இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கை மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது,
இனி எப்போதும் இந்தியாவில் எமர்ஜென்சி நடைமுறையில் இருக்கும் என்று சிலர் கூறியதாகவும், ஆனால் இந்திய மக்கள் அதற்கு எதிராக எழுந்து நின்றதாக குறிப்பிட்டார். கடந்த 10
ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள்
ஏற்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், இத்தகைய
மாற்றங்கள் இந்தியாவில் நிகழும் என பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்
Next Story