நாளை மறுநாள்... நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய 3 முன்னணி கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி...ஜனவரி 15 அன்று மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி காலை 10.30 மணியளவில் இந்த 3 கடற்படை போர்க் கப்பல்களையும் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்... P15B ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் 4வது மற்றும் இறுதி கப்பலான ஐஎன்எஸ் சூரத் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும். இது 75% உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. P 17 A Stealth Frigate திட்டத்தின் முதல் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. P75 Scorpene திட்டத்தின் 6வது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வக்க்ஷீர் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.