இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் விடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

x

உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியல் சாசனத்தின் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்திய அரசியல் சாசன தினத்தை கொண்டாடும் இந்த நாளில், மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை மறக்க முடியாது எனக் கூறி, தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் தரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு தேவை மற்றும் எதிர்பார்ப்பை இந்திய அரசியல் சாசனம் பூர்த்தி செய்து இருப்பதாக தெரிவித்த அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் பிரதியில் ராமர், சீதா தேவி, ஹனுமான், புத்தர், மகாவீரர் போன்றவர்களின் படங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்