``ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்'' - வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
77-வது ராணுவ தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், நமது தேச பாதுகாப்பின் காவலராக விளங்கும் ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் துணிச்சலான இதயங்கள் செய்த தியாகங்களை நினைவுகூர்வதாகவும், உறுதிப்பாடு, தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்திய ராணுவம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக தங்கள் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி, நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தும் நிலையில், வரும் காலங்களிலும் இது தொடரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Next Story