கயானாவில் பிரதமர் மோடி காத்திருந்த சர்ப்ரைஸ்

x

அரசு முறைப் பயணமாக கயானா நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கயானா நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய அவர், தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமனேட் கார்டன் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நிகழ்த்தப்பட்ட ராம பஜனை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்று வாத்திய கருவியை இசைத்தார். அதைத் தொடர்ந்து, ஆர்ய சமாஜ் நினைவுச் சின்னத்திலும் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்