2025-ல் நாடே எதிர்பார்க்கும் அறிவிப்புகள் - தயாராகும் பிரதமர் மோடி
2025-26 மத்திய பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார அறிஞர்கள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் மோடி, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் CEO BVR சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி உத்வேகத்தை பராமரித்தல் என்ற தலைப்பில் ஆலோசனை நடைபெற்றது. வேளாண் அமைப்பினர் மற்றும் வேளாண் பொருளாதார அறிஞர்களுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியிருந்து குறிப்பிடத்தக்கது.
Next Story