சினிமா பாணியில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை - பெட்ரோல் பங்கில் நடந்த அதிர்ச்சி
பீகாரில், பெட்ரோல் பங்கில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சஹர்சா (Saharsa) பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவது போல, பைக்கில் வந்த 2 பேர் உள்ளிட்டோர், திடீரென துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஊழியரின் பணப்பையை பறித்துச் சென்றனர். அதில், சுமார் 25 ஆயிரம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Next Story