துணை CMக்கே இந்த நிலையா..? ஆந்திராவையே அதிர வைத்த.. அந்த நபர் யார்..? பரபர பின்னணி

x

பிரபல தெலுங்கு நடிகரும். ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு, போனில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக ஜனசேனா கட்சி நேற்று தெரிவித்திருந்தது. துணை முதல்வர் பவன் கல்யாணின் அலுவலக ஊழியர்களுக்கு, அகண்டக்குடியில் இருந்து

மிரட்டல் அழைப்பு வந்தது. அவர் கொல்லப்படுவார் என்று அந்த நபர் எச்சரிக்கை விடுத்தார். அவதூறான வார்த்தைகளால் எச்சரிக்கை செய்திகளையும் அனுப்பினார். அலுவலக ஊழியர்கள் இந்த மிரட்டல்

அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை துணை முதல்வர் பவன் கல்யாணின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கொலை மிரட்டல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல்

தெரிவித்தனர். இதன் அடிப்படையில், விஜயவாடாவில் உள்ள லப்பிபேட் போலீசார், கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கைது செய்தி விசாரணை

நடத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்