ஒற்றை வார்த்தையால் அதிர்ந்த மக்களவை..திசை திருப்பிவிட்ட பாஜக..உச்சக்கட்ட பரபரப்பில் தலைநகர்

x

ஒற்றை வார்த்தையால் அதிர்ந்த மக்களவை..திசை திருப்பிவிட்ட பாஜக..உச்சக்கட்ட பரபரப்பில் தலைநகர்

மாநிலங்களவையில், அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என கூறுவது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்களவை இன்று காலை கூடியதும், இந்த விவகாரத்தை முன்வைத்து முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள், ஜெய் பீம் ஜெய் பீம் என முழக்கங்களை எழுப்பியதோடு, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்டு பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ் தான் என்று குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சிகள், அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 1952 ம் ஆண்டு பொது தேர்தலில் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தோற்கடித்த நிலையில், அதன் பிறகு நடைபெற்ற விதர்பா இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை தோற்கடித்ததாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்