ஹாஸ்பிடலில் பாஜக MPக்கள்... போனை போட்ட PM மோடி... பரபரக்கும் டெல்லி | PM Modi
நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு இந்தியா கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் காயமடைந்தனர். இருவரும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, ஷிவ்ராஜ் சிங் சௌஹான், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். எம்பிக்கள் இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Next Story