பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் | அருட்தந்தை சொ.ஜோ. அருண் கண்டனம் |

x

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், பஹல்காம் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத கோரச்செயல் எனவும், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு நடைபெற்றுள்ள மிக மோசமான தாக்குதல் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான படுமோசமான இத்தாக்குதல் மன்னிக்க முடியாத படுபாதகமான குற்றம் என சாடியுள்ள அருட்தந்தை சொ. ஜோ அருண், இந்த காட்டுமிராண்டி தாக்குதலை இந்திய மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநிறுத்த ஆக்கப்பூர்வமான முன் முயற்சிகளை செய்திருக்க வேண்டிய மத்திய அரசு, அதனை தவறிவிட்டது எனவும் அருட்தந்தை சொ.ஜோ. அருண் குற்றம்சாட்டியுள்ளார். அருட்தந்தை சொ.ஜோ. அருணின் இந்த பேட்டியின்போது, சிறுபான்மை ஆணைய உறுப்பினர் நாகூர் ஏ.எச். நஜிமுதீன் உடன் இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்